கண் கண்ணாடியில் காமிரா-இந்த புதிய கண்டு பிடிப்பு உலகை உலுக்குமா?

மே 16, 2008 at 4:31 மு.பகல் | In Uncategorized | Leave a Comment

 

கண்ணாடியில் காமிரா

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் டிஜிட்டல் காமிராவுடன் கூடிய நவீன கண்கண்ணாடிகளை உருவாக்கி இருக்கிறது. இந்த கண்ணாடியை அணிந்து இருக்கும் போது பார்க்கும் காட்சியை அப்படியே படம் பிடிக்க விரும்பினால், ரிமோட் பட்டனை தட்டினால் போதும் கண்ணாடியில் உள்ள காமிரா படம்பிடித்து விடும்.

இந்த கண்கண்ணாடியின் மற்றொரு பக்கத்தில் எம்.பி.3,பிளேயரும் உள்ளது. விரும்பிய பாடல்களை இதன் முலம் கேட்கலாம். இந்த அதிநவீன கண்ணாடியின் விலை 5ஆயிரம் ரூபாய்.

http://www.maalaimalar.com/

 

கிரிக்கெட்:அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

மே 16, 2008 at 4:30 மு.பகல் | In Uncategorized | Leave a Comment

கிரிக்கெட்:அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

20 ஓவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது மைதான ஓரத்தில் இளம்பெண்களின் துள்ளாட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக உள்ளது. ஆனால் இதற்கு ஒரு சாராரிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. நமது கலா சாரத்துக்கு எதிராக இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்தபடி உள்ளனர்.

ஐதராபாத்தில் நேற்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய போதும் அழகிகள் ஆட்டம் போட்டனர். ஆனால் முன்பு போல அவர்கள் அரைகுறை ஆடையில் இல்லை. உடலை முழுமையாக மறைத்து இருந்தார்கள்.

இந்த திடீர் மாற்றத்துக்கு ஆந்திர பிரதேச பா.ஜ.க.வினர்தான் காரணம். ஆட்டம் போடும் அழகிகள் ஒழுங்காக உடை அணியாவிட்டால் ஐ.பி.எல். ஆட்டத்துக்கு இடைïறு செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் நேற்று அழகிகள் ஆடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது நடனம் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து 12 அழகிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திடீரென உடலை மறைத்து உடை அணிய சொன்னது அழகிகளை "அப்செட்'' ஆக்கி உள்ளது. ஆனால் ஐதராபாத் அணியில் உள்ள அப்ரிடி "அப்பாடா…'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இவர்தான் ஆரம்பத்தில் இருந்தே, அழகிகள் ஆடுவதால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று கூறி வந்தார்.

http://www.maalaimalar.com/

சென்னையில் நடந்த பிராத்தனை கூட்டத்தில் சகோதரி நடிகை நக்மா என்ன பேசினார்-தினத்தந்தி நாழிதல்

மே 16, 2008 at 4:29 மு.பகல் | In Uncategorized | Leave a Comment

சென்னையில் நடந்த பிராத்தனை கூட்டத்தில் சகோதரி நடிகை நக்மா என்ன பேசினார்

மே 16, 2008 at 3:40 மு.பகல் | In Uncategorized | Leave a Comment

திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயம்

மே 15, 2008 at 4:47 பிற்பகல் | In Uncategorized | Leave a Comment

திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயம்

மும்பை, பிப். 4- திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்க மாராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாய மாக்க வேண்டும். அப்போதுதான் அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் குறையும் என்று அரசு அமைத்த உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை அரசு ஏற்று, பொது மக்களின் கருத்தை அறிய முடிவு செய்துள்ளது. பொது மக்களின் கருத்தை அறிந்ததும், இது தொடர்பான சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே, கோவா, ஆந்திராவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்த முடியவில்லை.
மராட்டியத்தில் அமல்படுத்தப்பட்டால் அதுவே திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயமாக்கும் முதல் மாநிலமாக இருக்கும்.

 http://www.viduthalai.com/20080204/news14.html

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.